News August 28, 2025
பைக் விலை ₹10,000 வரை குறைகிறது

திருத்தப்பட்ட GST வரி விதிப்பு நடைமுறைக்கு வரும்போது, சிறிய வகை பைக்குகளுக்கான வரி 28%-லிருந்து 18% ஆக குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ₹1 லட்சத்துக்கு விற்பனையாகும் பைக் ₹10,000 வரை குறைய வாய்ப்புள்ளது. எனவே, தற்போதைக்கு பைக் வாங்கும் ஐடியா இருந்தால், தீபாவளி வரை தள்ளிப்போடுங்கள்.. அதேநேரம் 350 சிசி-க்கும் மேல் உள்ள பெரிய பைக்குகளுக்கான வரி 40%ஆக உயரக்கூடும் என தெரிகிறது.
Similar News
News March 23, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது

ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10% சரிந்துள்ளது. தற்போது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $102.26 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக சீரடையும் பட்சத்தில், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
News March 23, 2026
EPS மீது கிருஷ்ணசாமி அதிருப்தி!

அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது. இந்நிலையில் GK வாசனை அடுத்து கிருஷ்ணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். EPS உடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், தொகுதியை இறுதி செய்தால் தான் கூட்டணி முடிவை அறிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 4 முனை போட்டியுள்ள நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என அவர் முன்பே கூறியிருந்தார்.