News August 28, 2025
தர்மபுரி: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540114>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 28, 2025
தருமபுரியில் பேச்சுப் போட்டிகள்: மாணவர்களுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. செப்.1 அண்ணாவுக்கும், செப்.2 பெரியாருக்கும் போட்டிகள் நடைபெறும். தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வுகள் நடக்கும். இதில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 28, 2025
தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆக.28) நடைபெற்றது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தனர்.
News August 28, 2025
தர்மபுரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தர்மபுரி மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.