News April 9, 2024
ஈரோடு அருகே குவிந்த மக்கள்

பவானி நகரம் 16 ஆவது வார்டு திருநீலகண்டர் வீதியில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை குறித்து பலமுறை அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்திருந்தனர். பலமுறை கோரிக்கை அளித்தும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News March 14, 2026
ஈரோட்டில் உங்களுக்கு நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

ஈரோடு மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு<
News March 14, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News March 14, 2026
கோபி அருகே விபத்து: இளைஞர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், இன்று வேலைக்குச் சென்றபோது பூச்சாங்காட்டு தோட்டம் அருகே தனியார் கம்பெனி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கூலித் தொழிலாளியான இவரது மரணம் குறித்து திங்களூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


