News August 28, 2025
நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று(ஆக.27) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.89-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
Similar News
News August 29, 2025
நாமக்கல்: வி.ஏ.ஓ வை தாக்கிய நபர் மீது குண்டாஸ்

மல்லசமுத்திரம் அருகே பாலமேடு பகுதியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்த பெண் வி.ஏ.ஓ சிவகாமி மீது கடந்த வாரம் வீட்டுக்கே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய, சீனிவாசன் என்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் சீனிவாசன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை காவலர்கள் சிறையில் இருந்த சீனிவாசனிடம் வழங்கினர்.
News August 29, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரப்பாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்.
News August 29, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட். 28 ) நாமக்கல் – கோமதி (9498167680 ), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – சங்கீதா ( 9498167212), வேலூர் – இந்திராணி ( 9498169033) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.