News August 28, 2025

ஆஸ்கர் பரிந்துரையில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு

image

பப்புவா நியூ கினியா சார்பில் முதல் முறையாக ஆஸ்கர் விருதுக்கு ‘Papa Buka’ என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மலையாள இயக்குநர் பிஜு குமார் தாமோதரன் இயக்கியுள்ள இப்படத்தை, அக்‌ஷய் குமார் பரிஜாவுடன் இணைந்து பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்நிலையில், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் இணை தயாரிப்பாக இந்தியா பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ரஞ்சித் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 16, 2026

2001-ல் பாஜகவால் திமுக தோற்றது: TKS இளங்கோவன்

image

பாஜக கூட்டணிக்கு யார் சென்றாலும் தோல்வியை தழுவுவார்கள் என TKS இளங்கோவன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணிக்கு விஜய் சென்றால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒருவேளை நடந்தால் அது தங்களுக்கு நன்மை தான் என அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததாலேயே 2001 தேர்தலில் திமுக தோற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 2001-ல் பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணிக்கு 37 இடங்களே கிடைத்தது.

News March 16, 2026

FLASH: விலை ஒரேயடியாக ₹1 லட்சம் குறைந்தது

image

டாடா தனது EV கார்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு எவ்வளவு சலுகை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க. இந்த தள்ளுபடி சலுகைகள் மார்ச் மாதம் வரை மட்டுமே வழங்கப்படும்.

News March 16, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியானது HAPPY NEWS

image

ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை பார்க்க உள்ளதாம். நாளை மறு ஆய்வு நடைபெறாவிட்டால் மார்ச் 19-ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமே படத்தை மறு ஆய்வுக்குழு பார்ப்பதாக இருந்த நிலையில், குழுவில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிப்போனது. பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜன நாயகன் படம், சென்சார் பிரச்னையால் தற்போதுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.

error: Content is protected !!