News August 28, 2025

விழுப்புரம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539572>>தொடர்ச்சி <<>>

Similar News

News August 28, 2025

விழுப்புரத்தில் அரசு வேலை! நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 44 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கு<<>> கிளிக் செய்து நாளை மாலை 5.45க்குள் விண்ணப்பிக்கலாம். உள்ளூரில் அரசு வேலை தேடும் நண்பகளுக்கு SHARE பண்ணுங்க

News August 28, 2025

அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு.

image

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனை வளாகம், கழிப்பறைகள், வார்டுகள் ஆகியவற்றின் சுகாதார நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகளுக்கு முறையாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

News August 28, 2025

பட்டாசு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. உடன் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குநர் (திருச்சி) கலந்துகொண்டனர்.

error: Content is protected !!