News August 28, 2025
முகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த தினங்கள் வருவதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவில் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள், 12 தட்கல் டோக்கன்களோடு 4 கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படும்.
Similar News
News August 28, 2025
டேட்டிங் செயலிகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்

டேட்டிங் செயலிகளை பெரும்பாலும் ஆண்களே பயன்படுத்துவார்கள் என நினைப்போம். ஆனால் இந்தியாவில் டேட்டிங், மேட்ரிமோனி தளங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்களாக பெண்களே இருக்கின்றனர். சமீபத்தில் ‘Knot Dating’ CEO ஜஸ்வீர் சிங்கும் இதேபோன்றதொரு தகவலை பகிர்ந்துள்ளார். அவரது செயலியை சப்ஸ்கிரைப் செய்தவர்களில் 57% பேர் பெண்கள் எனவும், 6 மாத கட்டணம் ₹57,459 என்பதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
News August 28, 2025
Beauty: முடி நிக்காம வளரணுமா? இதை செய்து பாருங்க..

உங்களுக்கு முடி உதிர்வு, இளநரை, வறண்ட முடி, பொடுகு தொல்லை என அனைத்தும் இருக்கிறதா? இவை அனைத்தையும் ஒரேயொரு பொருளை வைத்து சரி செய்யலாம். அதுதான் அன்னாசி பூ. ▶முதலில், அன்னாசி பூவை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் ▶அதை தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடுங்கள் ▶வடிகட்டிய பிறகு அந்த எண்ணையை வாரத்திற்கு இருமுறை தலைக்கு பயன்படுத்துங்கள். SHARE.
News August 28, 2025
சீன வீராங்கனையை சிதறவிட்ட சிந்து

பாரிஸில் நடக்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3வது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் Wang Zhi Yi-ஐ எதிர்கொண்ட அவர் 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இத்துடன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிந்து ஒரு முறை கூட சீனா வீராங்கனைகளிடம் தோற்றதில்லை என்ற சாதனை நீடிக்கிறது.