News August 28, 2025
BREAKING: வெள்ளத்தில் சிக்கி ஒரு குடும்பமே அழிந்தது

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் கனமழை காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை காரில் கடக்க முயன்றபோது, தமிழகத்தை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரர், மனைவி, 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Similar News
News August 28, 2025
Parenting: நல்லா படித்த குழந்தை இப்போ Dull-ஆ படிக்குதா?

நன்றாக படித்து வந்த உங்கள் குழந்தை திடீரென குறைவான மதிப்பெண் வாங்குகிறார்களா? அவர்கள் படிப்பில் கவனம் செலுத்த இவற்றை செய்யலாம். ▶குழந்தையை முட்டாள் என கூற வேண்டாம் ▶எப்போதும் 1st Rank எடுக்க சொல்லாதீர்கள் ▶ படிக்கும்போது அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் சாதனங்களை ஒதுக்கிவையுங்கள் ▶பள்ளியில் ஏதேனும் பிரச்னையா என கேளுங்கள் ▶விளையாட அனுப்புங்கள் ▶ சின்ன சின்ன பாராட்டுகளை வழங்குங்கள். SHARE.
News August 28, 2025
நடிகை லட்சுமி மேனன் வழக்கில் புதிய திருப்பம்

<<17543079>>ஐடி ஊழியரை கடத்தி <<>>தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக நடிகை லட்சுமி மேனன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஐடி ஊழியர் பாரில் தன்னை ஆபாச வார்த்தைகளால் வசைபாடி பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக லட்சுமி மேனன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்கள் தாக்கியதாக கூறப்படும் புகார் பொய்யானது என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News August 28, 2025
பாதை மாறிய திருமாவளவன்.. செல்லூர் ராஜூ பதிலடி

<<17537118>>RSS-ன் பிடியில் அதிமுக<<>> இருப்பதாக திருமாவளவன் கூறியிருந்த நிலையில், அவர்தான் திசைமாறி காட்டுக்குள் சென்று தவிப்பதாக செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக, எப்போதும் தனது கொள்கையின் பாதையில் இருந்து மாறாது என்றார். மேலும், எங்களுக்கு யாரும் எஜமானர்கள் இல்லை எனவும், நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?