News August 28, 2025
நாதகவில் மீண்டும் இணையவுள்ள காளியம்மாள்?

நாதகவில் இருந்து வெளியேறிய காளியம்மாள், தவெகவில் இணைய இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இதற்கிடையே அதிமுக, திமுகவிலும் அவர் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆஃப்பர்கள் எதுவும் கைகூடி வராததால் மீண்டும் தாய்வீடான நாதகவிலேயே இணைய அவர் அடி போட்டு வருவதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக சீமானுக்கும் அவர் தூது பறக்கவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News March 6, 2026
PM KISAN திட்டத்தின் தவணை ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 22-வது தவணையை (₹2,000) மார்ச் 13-ம் தேதி டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் அசாமில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி, இதற்கான நிதியை விடுவிக்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பாக, pmkisan.gov.in இணையதளம் சென்று Know Your Status ஆப்சன் மூலம் பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.
News March 6, 2026
LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ்க்கு(LPG) தட்டுப்பாடு வராமல் இருக்க LPG உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. LPG-க்கு தேவையான அனைத்து எரிவாயுவையும் 3 அரசு நிறுவனங்களுக்கு (IOC, BPCL, HPCL) மட்டும் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. ஈரான் போர் சூழலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ள நிலையில், அதை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
News March 6, 2026
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம்.. நயன்தாரா வாழ்த்து REWIND

விஜய் – த்ரிஷா சர்ச்சை SM-ல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே, த்ரிஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த பழைய பதிவு SM-ல் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், த்ரிஷா, வருண் ஆகியோருக்கு வாழ்த்துகள் என நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 2015-ம் ஆண்டு வருண் என்பவருடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.


