News August 28, 2025
நாமக்கல்: சிலிண்டர் பிரச்னையா? உடனே CALL!

நாமக்கல் : எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News March 4, 2026
நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதியில் கடும் பாதிப்பு !

நாமக்கல்லிலிருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி போர்காரணமாக, முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கப்பலில் 77 கன்டெய்னர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட ரூ. 14 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், நாமக்கல்லில் முட்டை விலை குறைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
News March 4, 2026
குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா ?

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக சேர்மன் எஸ் பாலு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். இவரது மனுவை பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமார் அண்ணா அறிவாலயத்தில் அளித்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாலு பெயர் திமுக வேட்பாளர் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
நாமக்கல் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

நாமக்கல், வேலகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்ற பொம்மம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


