News August 28, 2025

நாகை: அனைத்தும் அருளும் நவதீதேஸ்வரர்

image

நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவதீதேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி, நினைத்து காரியம் கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க. இந்த கோவிலுக்கு நீங்கள் சென்றது உண்டா என கமெண்டில் தெரிவிக்கவும்.

Similar News

News August 28, 2025

நாகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04365-248121) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

நாகை மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

நாகை மக்களே..தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 04365-253048 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இதை SHARE பண்ணவும்!

News August 28, 2025

நாளை முழுவதும் ஆட்டோக்களுக்கு தடை

image

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நாளை (ஆக.29) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நாளை காலை முதல் இரவு 12 மணி வரை வேளாங்கண்ணி நுழைவாயிலான ஆர்ச் முதல் பேராலயத்தை சுற்றி உள்ள கடைகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆட்டோக்கள் செல்வதற்கும் நிறுத்துவதற்கும் மாவட்ட காவல்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

error: Content is protected !!