News August 28, 2025

BREAKING: அடுத்தடுத்து விஜய் ரசிகர்கள் மரணம்

image

தவெக மாநாட்டிற்கு முன்பும், பின்பும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன், நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சாப்பிட சென்றுள்ளார். அப்போது மதன் காணாமல் போன நிலையில், கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் 22-ம் தேதி விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Similar News

News March 20, 2026

பறிமுதல் செய்யப்பட்ட பணம் – கலெக்டர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே ரூ.50,000 மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தால், அவற்றை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட கருவூல அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

தவெக ஒரு பால்வாடி இயக்கம்: சேகர்பாபு

image

தவெகவை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பேய், பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல என்ற அவர், கூவி கூவி அழைத்தும் யாரும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு வரவில்லை என்று சாடினார். பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் பாடம் புகட்டும் என்று சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை திமுகவுக்கு எதிரிகளே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

News March 20, 2026

தொகுதி உடன்பாட்டில் தாமதம்… முடிவு யார் கையில்?

image

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி உடன்பாடு இதுவரை எட்டப்படவில்லை. கடந்தவாரம் பியூஷ் கோயல் வந்துசென்றார். இப்போது EPS டெல்லி சென்றுள்ளார். TTV, அன்புமணியும் கூட டெல்லி சென்றுள்ளனர். கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் எனில், உடன்பாடு காண ஏன் அனைவரும் டெல்லி செல்கின்றனர். தொகுதி ஒதுக்கீட்டை EPS முடிவு செய்கிறாரா அல்லது பாஜக முடிவு செய்கிறதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!