News August 28, 2025
செந்துறை பகுதிகளில் மின் தடை

திண்டுக்கல்: செந்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குரும்பபட்டி, செந்துறை, மல்லமநாயக்கன்பட்டி, கலத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தக்கடை, வேப்பம்பட்டி, மணக்காட்டூர், சுக்காம்பட்டி, பிள்ளையார் நத்தம், மாதவநாயக்கன் பட்டி, அடைக்கனூர், குடகிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE IT)
Similar News
News September 24, 2025
திண்டுக்கல்: மாணவர் தலை நசுங்கி பலி

திண்டுக்கல், தனியார்.கல்லூரியை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரில் பின்புறம் அமர்ந்திருந்த மாணவன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 24, 2025
திண்டுக்கல்: பாஜக சமூக ஊடகப்பிரிவு தலைவர் நியமனம்!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் பரிந்துரையின் பேரில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாவட்டத் தலைவராக ஜோதிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
அதிகாரிபட்டி: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!

சிலுவத்தூர்-வங்கமனத்தூர், அதிகாரிபட்டியில் நடந்து செல்வதற்கு பாதை வசதி கோரி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த மக்கள் இந்த போராட்டத்தில் இறங்கினர். தகவலறிந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.