News August 28, 2025
ஆம்பூருக்கு விரைந்த வேலூர் போலீசார்

ஆம்பூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக.28) வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூரில் இருந்து 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசார் ஆம்பூருக்கு சென்றனர்.
Similar News
News August 28, 2025
வேலூர்: பெண் குழந்தை இருக்கா?

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க (<<17541513>>தொடர்ச்சி) <<>>
News August 28, 2025
பெண் குழந்தை இருக்கா? (2/2)

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)
News August 28, 2025
வேலூர் கலெக்டர் ஆய்வு

வேலூர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரிகிரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 13 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அருள், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.