News August 28, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.28) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நல்லாத்தூர், புதுக்கடை, தூக்கணாம்பாக்கம், நத்தப்பட்டு, திருப்பாப்புலியூர், எஸ்.புதூர், சிற்றரசூர், ஆராய்ச்சி குப்பம், கீழ்கவரப்பட்டு, அடரி, எம்.பரூர், எருமனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

கடலூரில் நாளை ”உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி

image

கடலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று (ஆக.29) கடலூர் புனித அன்னாள் பெண்கள் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில். கல்விக் கடன் கோரும் மாணவர்கள் <>vidyalakshmi <<>>என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும், உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 28, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.28) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

கடலூர் மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04142-212660) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

error: Content is protected !!