News August 28, 2025
கோவையில் பக்தர்களை கவர்ந்த பரோட்டா விநாயகர்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ரூ.10 லட்சம் சலவை நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் என விநாயக பெருமான் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டாவில் விநாயகர் உருவம் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
Similar News
News August 28, 2025
கோவை: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 28, 2025
கோவைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை வானிலை மையம்

கோவை மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
கோவை: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

கோவை மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 முதல் வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்களுக்கு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!