News August 28, 2025
தொப்பையை குறைக்கும் நௌகாசனம்!

✦ரத்த ஓட்டத்தை சீராக்கி, தொப்பையை குறைக்க உதவுகிறது.
➥தரையில் கால்களை நீட்டி, முதுகு நேராக இருக்கும்படி அமரவும்.
➥உடலை சற்று பின்னால் சாய்த்து கொண்டே, கால்களை வளைக்காமல் தரையிலிருந்து சுமார் 45 Degree உயர்த்தவும்.
➥கைகளை கால்களுக்கு மேல் நீட்டியபடி வைக்கவும். உங்கள் உடலை ஒரு படகு வைக்கவும்.
➥இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
Similar News
News August 28, 2025
இந்தியாவை சீண்டுவதா? டிரம்ப்பை சாடும் எதிர்கட்சிகள்

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை கண்டிக்காமல், இந்தியா மீது அதிக வரிவிதிப்பதாக டிரம்ப்பை ஜனநாயகக் கட்சியினர் சாடியுள்ளனர். இந்த வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இந்தியா – அமெரிக்க உறவை நாசப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், இந்த வரிவிதிப்பிற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் எனவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
News August 28, 2025
தமிழக அணிக்கு பின்னடைவு… விடைபெற்ற CSK வீரர்

தமிழகத்தின் ஹர்திக் பாண்ட்யா என்றழைக்கப்பட்ட விஜய் சங்கர் TNCA-வில் இருந்து விலகியுள்ளார். வேறு மாநிலத்திற்காக விளையாட தமிழக கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடை இல்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார். ரஞ்சி, விஜய் ஹசாரே தொடர்களில் தமிழகத்தை வழிநடத்திய அவருக்கு தற்போது பிளேயிங் 11-ல் இடம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக கேரளா அல்லது திரிபுரா அணிகளில் விளையாட வாய்ப்பு தேடி வருகிறார்.
News August 28, 2025
‘அம்மா GOOD BYE.. நான் சாகப்போறேன்’..சோக முடிவு

‘அம்மா நான் சாகப்போறேன். இறந்த பின் யாருக்கேனும் தேவைப்பட்டால் எனது உடலை தானம் செய்யுங்கள். எனது அறை மற்றும் உடைமைகளை தம்பிக்கு கொடுத்து விடுங்கள்’. ம.பி.யில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு 7-ம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம் இது. பாட புத்தகத்தை தவறவிட்டதால் அம்மா திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி விபரீத முடிவெடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல நண்பர்களே..!