News August 28, 2025
வியாழக்கிழமையில் குரு பகவானின் முழு அருள் பெற..

மந்திரம்:
குணமிகு வியாழ குரு பகவானே!
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ குருபர நேசா!
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில், இந்த மந்திரத்தை சொன்னால், வாழ்க்கையில் இன்பம் பெருகி என்றும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
Similar News
News August 28, 2025
‘அம்மா GOOD BYE.. நான் சாகப்போறேன்’..சோக முடிவு

‘அம்மா நான் சாகப்போறேன். இறந்த பின் யாருக்கேனும் தேவைப்பட்டால் எனது உடலை தானம் செய்யுங்கள். எனது அறை மற்றும் உடைமைகளை தம்பிக்கு கொடுத்து விடுங்கள்’. ம.பி.யில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்பு 7-ம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம் இது. பாட புத்தகத்தை தவறவிட்டதால் அம்மா திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த மாணவி விபரீத முடிவெடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல நண்பர்களே..!
News August 28, 2025
TNPSC குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. 70 காலிப் பணியிடங்களுக்கான இத்தேர்வை கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி 2.27 லட்சம் பேர் எழுதினர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிய <
News August 28, 2025
கோர்ட் கதவை தட்டிய கேமிங் நிறுவனங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை எதிர்த்து, முன்னனி ஆன்லைன் கேமிங் நிறுவனமான A23 கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்த 20-ம் தேதி லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.