News April 9, 2024
இயந்திர வாக்குப்பதிவுக்கு பதில் வாக்குச்சீட்டு முறை

மக்களவைத் தேர்தலையொட்டி, விசிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். அதில், ஆளுநர் பதவி ஒழிக்கப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக உயர்த்தவும், இத்திட்டத்தை நகர்புறங்களில் அமல்படுத்தவும் வலியுறுத்தப்படும், இயந்திர வாக்குப்பதிவு முறைக்கு பதில் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்படும் ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
Similar News
News January 23, 2026
அதிமுக – அமமுக இணைப்புக்கு அமித்ஷாவே காரணம்: TTV

அதிமுக விவகாரம் எங்கள் குடும்ப பிரச்னை; நானும், அண்ணன் EPS-ம் எப்போது இணைந்தோமோ, அப்போதே அனைத்தையும் மறந்துவிட்டோம் என TTV தெரிவித்தார். 2021-ல் இருவரும் இணைய வேண்டும் என அமித்ஷா விரும்பினார். அப்போது நடக்கவில்லை; ஆனால், இப்போது நடந்துவிட்டது எனக் கூறிய அவர் 2017-க்கு முன் இருவரும் எப்படி இருந்தமோ, அதேபோல் அண்ணன், தம்பியாக இணைந்தே தேர்தல் பரப்புரை செய்வோம் எனவும் தெரிவித்தார்.
News January 23, 2026
வங்கிக் கணக்கில் ₹4,000.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் முதியோருக்கான உதவித் தொகையை மேலும் ₹500 உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 80 வயதைக் கடந்தவர்களுக்கு (முன்பு ₹3,500) பிப்., முதல் ₹4,000 வழங்கப்பட உள்ளது. மேலும், 55 – 59 வயதுடையோருக்கான உதவித் தொகை ₹2,500 ஆகவும், 60 – 69 வயதுடையோருக்கான உதவித் தொகை ₹3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதியோருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இது உயர்த்தப்படுமா?
News January 23, 2026
நடிகை நதியாவின் புதிய PHOTO வெளியானது

‘உங்களுக்கு வயசே ஆகாதா?’… நடிகை நதியா பதிவிட்டுள்ள போட்டோக்களை பார்த்தால் இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது. 80’ஸ் கிட்ஸ்களின் இதயங்களை கொள்ளையடித்த அவர், 59 வயதிலும் இளமையாகவே இருக்கிறார். ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், எம்.குமரன் S/O மகாலெட்சுமி படத்தின் மூலம் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். நதியாவின் நடிப்பில் உங்களுக்கு பிடித்த படம் எது?


