News August 28, 2025
இந்த உயிரினத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க…

புகைப்படத்தில் நீங்கள் காண்பது தங்க மீன் அல்ல. இது சற்று வழக்கத்திற்கு மாறான சுறா மீன். கோஸ்ட் ரிகா நாட்டின் கடற்கரை பகுதியில் இந்த ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதெப்படி ஆரஞ்சு நிறத்தில் சுறா ? அதாவது உயிரினங்களின் தோலில் நிறமிகள் (மெலனின்) இழக்க தொடங்கினால் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறம் அதிகமாக வெளிப்படும் எனவும் இது அரிதினும் அரிது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News August 28, 2025
USA வரிவிதிப்பால் ₹3,000 கோடி வர்த்தகம் பாதிப்பு: CM ஸ்டாலின்

USA-வின் 50% வரிவிதிப்பால் தமிழகத்தின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜவுளித் துறையின் மையமான திருப்பூரில் ₹3,000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News August 28, 2025
3 மாதங்களாக துக்கத்தில் இருந்தோம்: RCB

மிகப்பெரிய கொண்டாட்டத்தை தலைகீழாக மாற்றி, எங்கள் இதயத்தை உடைத்த நாள் ஜூன் 4 என RCB நிர்வாகம் தெரிவித்துள்ளது. RCB வெற்றி பேரணி நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 3 மாதங்களாக மெளனமாக இருந்தது என்பது எங்களது துக்கத்தின் வெளிப்பாடு என உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கவனத்துடன் இருந்து ரசிகர்களோடு எங்கள் பயணத்தை தொடர்கிறோம் என்றும் RCB தெரிவித்துள்ளது.
News August 28, 2025
BREAKING: விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு

BJP கூட்டணியில் இருக்கும் டிடிவி, விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் சர்வே எடுத்தவர்கள் சொல்வதை பார்த்தால், 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, 2026-ல் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யால் பல கட்சிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்; இதை கூறுவதால் தவெகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.