News August 28, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News August 28, 2025

3 மாதங்களாக துக்கத்தில் இருந்தோம்: RCB

image

மிகப்பெரிய கொண்டாட்டத்தை தலைகீழாக மாற்றி, எங்கள் இதயத்தை உடைத்த நாள் ஜூன் 4 என RCB நிர்வாகம் தெரிவித்துள்ளது. RCB வெற்றி பேரணி நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 3 மாதங்களாக மெளனமாக இருந்தது என்பது எங்களது துக்கத்தின் வெளிப்பாடு என உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். கவனத்துடன் இருந்து ரசிகர்களோடு எங்கள் பயணத்தை தொடர்கிறோம் என்றும் RCB தெரிவித்துள்ளது.

News August 28, 2025

BREAKING: விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு

image

BJP கூட்டணியில் இருக்கும் டிடிவி, விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் சர்வே எடுத்தவர்கள் சொல்வதை பார்த்தால், 2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, 2026-ல் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய்யால் பல கட்சிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்; இதை கூறுவதால் தவெகவுடன் கூட்டணிக்கு செல்வேன் என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.

News August 28, 2025

ஏங்ககக…. கூடிய சீக்கிரம் கூமாபட்டிக்கு போலாமுங்க..!

image

ரீல்ஸுகளில் ட்ரெண்டான விருதுநகர் கூமாபட்டியை அரசு கண்டுகொள்ளவில்லை என புகார்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில், பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கூமாபட்டி கண்மாய் அருகே மீன் கண்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு பகுதி அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!