News August 28, 2025
மனநல மையங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி, ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினால், அனுமதியின்றி செயல்படும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் (ஆக.27) எச்சரித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி விவரங்கள்

நாளை (29-08-2025) தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் மேசைப் பந்து, கூடைப்பந்து போட்டிகள் பள்ளி மாணவிகளுக்கு மட்டும் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்று மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
News August 28, 2025
மாபெரும் தமிழ் கடவுள் சொற்பொழிவு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்சியில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் நிலம் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் இந்நிகழ்வு நடைபெறும். அந்தந்த மாவட்டத்தில் சொற்பொழிவாற்ற உள்ளவர்கள் கைபேசி எண், நடைபெறும் இடமும், தலைப்பும் படத்தில் உள்ளது.
News August 28, 2025
தி.மலை: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540108>>தொடர்ச்சி<<>>