News August 28, 2025
திருப்பூர் அருகே சாலை விபத்து விவசாயி பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் விவசாயி. இவருக்கு வட பருத்தி ஊரில் சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இன்று விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News August 28, 2025
திருப்பூருக்கு தினசரி 700 கோடி வரை இழப்பு

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. தினசரி ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி முத்துரத்தினம் தெரிவித்தார்.
News August 28, 2025
திருப்பூர்: EB துறையில் வேலை வேண்டுமா..? APPLY NOW

திருப்பூர் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <
News August 28, 2025
திருப்பூர் இலவச வீட்டு மனை வேண்டுமா..?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக வீட்டுமனை பெறலாம்.இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்து மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!