News August 28, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஆக.27) இரவு 10 மணி முதல் நாளை (ஆக.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மாவட்ட காவல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவலர்கள் எண்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
அரசுப் பள்ளிகளில் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை (ஆக.29) மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். திறன் திட்டம், மணற்கேணி பள்ளி தூதுவர்கள் திட்டம் போன்ற பல்வேறு கல்வி வளர்ச்சி செயல்பாடுகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
News August 28, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மோகனச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 28, 2025
திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’39’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <