News August 27, 2025
துண்டான கை: மீண்டும் பொருத்திய அரசு மருத்துவர்கள்!

கோவை பொள்ளாச்சியை சேர்ந்த தங்கமணி (30) குடும்ப தகராறில் தனது வலது கையை இழந்துள்ளார். கை உடனடி மருத்துவ உதவிக்காக பதப்படுத்தப்பட்டு பொள்ளாச்சி ஜிஎச்சில் வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கோவை ஜிஎச் கொண்டுவரப்பட்ட தங்கமணிக்கு சிகிச்சை துவங்கியது. ஆக.22 அதிகாலை 12:15 மணிக்கு மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையை தொடங்கியது. சுமார் 5 1/2 மணி நேரம் போராடி மீண்டும் வெற்றிகரமாக கையை பொருத்தப்பட்டது.
Similar News
News August 28, 2025
கோவை: கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்!

கோவை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இதனை மறக்காமல் கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க.
News August 28, 2025
கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கோவை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் அடிக்கடி குழாய் உடைப்பு மற்றும் வால்வுகளில் பழுது ஏற்படுகிறது. இது குறித்த புகார்களுக்கு, 89258 52927, 89258 52928 எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 28, 2025
கோவையில் பக்தர்களை கவர்ந்த பரோட்டா விநாயகர்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ரூ.10 லட்சம் சலவை நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் என விநாயக பெருமான் அலங்கரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டாவில் விநாயகர் உருவம் செய்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.