News April 9, 2024

NEET: விண்ணப்பிக்க சிறப்பு அனுமதி

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET) தேர்வுக்கு இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு, மாா்ச் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து வந்த நிலையில், 2 நாள் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 5, 2025

BREAKING: கூண்டோடு அதிரடி கைது

image

சென்னையில் வீடு ஒன்றில் போதை மாத்திரை விற்பனை செய்த பெண் உள்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புழல் பகுதியில் போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலமாக செலுத்தி கொண்ட கல்லூரி மாணவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட கும்பலிடம் 300 மாத்திரைகளும் சிக்கியுள்ளன.

News November 5, 2025

9-ம் தேதி கடைசி: அரசு மெடிக்கல் கல்லூரி அட்மிஷன்

image

2025-2026 கல்வியாண்டிற்கான M.D. (Yoga & Naturopathy) PG-க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ₹3,000. SC/ ST பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை. வரும் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாளை முதல் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 5, 2025

SIR கணக்கெடுப்பில் குளறுபடி: திமுக குற்றச்சாட்டு

image

தமிழ்நாட்டில் வாக்காளர் SIR பணி தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் கணக்கீடு படிவங்கள் தரப்படவில்லை என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார். ஓரிரு தொகுதிகளில் படிவங்களை கொடுத்துவிட்டு, மறுநாளே பூர்த்தி செய்துதர கேட்பதாகவும், 2002-க்கு பிறகு வெளியிடப்பட்ட அனைத்து வாக்காளர்கள் பட்டியலும் செல்லுபடி தன்மை அற்றதாக ஆகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!