News August 27, 2025
Tech: இத தெரிஞ்சிக்காம டெலிகிராம் Use பண்ணாதீங்க..

டெலிகிராம் செயலியில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1. Image Enhancer Improve Bot: Low Quality-ல் உள்ள உங்களது போட்டோக்களை HD-ஆக மாற்றும். 2. Voice 2 Text Bot: இதில் உங்கள் குரலை மட்டுமல்ல, வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களில் வரும் பேச்சையும் Text-ஆக மாற்றி கொடுக்கும். 3. File Converter Bot: இதில், போட்டோக்களை எளிதில் jpeg, png, pdf-ஆக மாற்றலாம். SHARE.
Similar News
News August 28, 2025
மேடையில் நடிகருக்கு மாரடைப்பு.. கவலைக்கிடம்!

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மலையாள நடிகர் ராஜேஷ் கேஷவ்விற்கு(47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கீழே சரிந்து விழுந்த அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பியூட்டிஃபுல், திருவனந்தபுரம் லாட்ஜ், ஹோட்டல் கலிஃபோர்னியா உள்ளிட்ட பல படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார்.
News August 28, 2025
வரலாற்றில் இன்று

*1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது
*1891 – திராவிட மொழியியலின் தந்தை, ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்
*1965 – நடிகை டிஸ்கோ சாந்தி பிறந்த தினம்
*1982 – நடிகர் பிரசன்னா பிறந்த தினம்
*1983 – முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பிறந்த தினம்
*2020-காங்கிரஸ் மூத்த தலைவர் H.வசந்தகுமார் நினைவு தினம்
News August 28, 2025
4 பேரின் உயிரை காவு வாங்கிய கூகுள் மேப்

வாகன ஓட்டிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றால் அது கூகுள் மேப் தான். ஆனால் சில சமயங்களில் அது நமக்கு எமனாகவும் மாறுவதுண்டு. அப்படி சோகமான சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ஆன்மிக சுற்றுலா முடிந்து 9 பேர் காரில் வீடு திரும்பியுள்ளனர். கூகுள் மேப் துணையுடன் சென்ற டிரைவருக்கு செயல்படாத பாலத்தை மேப் காட்டியுள்ளது. கடைசியில் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் பலியாகினர்.