News August 27, 2025
திருச்சி: அரசு வேலை; தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த <
Similar News
News August 28, 2025
திருச்சியில் உள்ள அதிசய கிணறு!

திருச்சி அடுத்த திருவெள்ளறையில் பல்லவமன்னன் தந்திவர்மன் ஆட்சி காலத்தில், ‘மார்பிடுகு பெருங்கிணறு’ என்ற பெயரில் ஸ்வஸ்திக் வடிவில் படிக்கட்டுகளுடன் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கிணறு கி.பி 800-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இறை உருவ சிற்பங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஸ்வஸ்திகா வடிவத்திலுள்ள பண்டைய கிணறு தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. இந்த தகவல் தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 28, 2025
சிறுமியை கர்ப்பமாகிய 16 வயது சிறுவன்

திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன் 16 வயதுடைய சிறுமியிடம் கடந்த 2024ம் ஆண்டு முதல் நட்பாக பழகியுள்ளார். பின்னர் மார்ச் 15ம் தேதி காதலிப்பதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமி 2 மாதம் கர்ப்பம் அடைந்ததை அடுத்து, புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 28, 2025
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

திருச்சி புலிவலம் பகுதியில் (ஆகஸ்ட் 27) புலிவலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுவலூர் பேருந்து நிறுத்தம் அருகே ராபின் (54) என்பவர், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராபினை கைது செய்த புலிவலம் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.