News August 27, 2025

தி.மலை: கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்

image

தி.மலை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.

Similar News

News August 28, 2025

தி.மலையை புகழ் பெற செய்த ஆன்மிகவாதி

image

தி.மலையை உலக அளவில் புகழ் பெற செய்தவர்களில் ரமண மகரிஷியும் ஒருவர். 1879ல் விருதுநகரில் பிறந்து 13 வயதில் ஆன்மிக நாட்டம் கொண்டு தி.மலை வந்து, தனது ஆன்மிக போதனைகள் மூலம் மக்களை கவர்ந்தார். பல நாட்டு மக்களும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களும் இவரை நாடி வந்து சீடர்களானார்கள். இன்றும் தி.மலையில் உள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்திற்கு உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

News August 28, 2025

தி.மலை மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம்

image

இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. மத்திய அரசின் சார்பில் தற்போது தேசிய தரநிர்ணய வாரிய சான்றிதழ் தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார்,திருவள்ளூர்,தேனி, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது என பொது சுகாதார துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

மனநல மையங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி, ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினால், அனுமதியின்றி செயல்படும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் (ஆக.27) எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!