News August 27, 2025
BREAKING: நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை

நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. <<17533814>>ஐடி ஊழியர் தாக்கப்பட்ட<<>> விவகாரத்தில், முன் ஜாமீன் கேட்டு நடிகை மனு அளித்த நிலையில், கோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. கொச்சியில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில் நடிகை மற்றும் எதிர் தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளிக்கவே நடிகை தலைமறைவானார்.
Similar News
News August 28, 2025
பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 – 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது.
News August 28, 2025
வியாழக்கிழமையில் குரு பகவானின் முழு அருள் பெற..

மந்திரம்:
குணமிகு வியாழ குரு பகவானே!
மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ குருபர நேசா!
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையில், இந்த மந்திரத்தை சொன்னால், வாழ்க்கையில் இன்பம் பெருகி என்றும் தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News August 28, 2025
அதிமுக கூட்டணியில் துணை முதல்வர்.. புது வியூகம்!

நெல்லையில் பேசிய அமித்ஷா TN-ல் கூட்டணி அரசு அமையும் என்றார். அதுவே அண்ணாமலை, EPS-யை முதல்வராக்க உழைக்க வேண்டுமென்றார். இக்கருத்துகளின் பின்னணியில் முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள நெருடல்களை பாஜக சரி செய்யும், ஆனால் கூட்டணி அரசு தான் அமைய வேண்டும் என பாஜக திட்டவட்டமாக EPS தரப்பிடம் சொல்லியதாக தகவல்கள் உள்ளன. துணை முதல்வர் பதவியும் பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது.