News August 27, 2025
தூய்மை பணியாளர்கள் மனு மீது விரைந்து நடவடிக்கை – ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் இரா.சுகுமார், பணியிட பாதுகாப்பு, சீருடை, ஊதியம் உறுதி செய்ய உத்தரவிட்டார். நான்கு பணியாளர்களுக்கு ரூ.59,000 மதிப்பில் இறப்பு, கல்வி, மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News March 13, 2026
திருநெல்வேலி: பெற்ற குழந்தையை GH-ல் விட்டு சென்ற தாய்

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரேணுகா என்பவரால் பெண் குழந்தை பெற்றெடுக்கப்பட்டு பின்பு அவர் மருத்துவமனையிலேயே அக்குழந்தையை விட்டுச் சென்று விட்டார். அக்குழந்தையை குழந்தை உதவி மைய பணியாளர் மூலமாக மீட்டு குழந்தை நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைக்கு குழந்தை நலக்குழுவால் கயல்விழி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார்.
News March 13, 2026
நெல்லை மாவட்ட காவல்துறையின் புதிய திட்டம்

நெல்லை மாவட்ட எஸ்பி டாக்டர் வி.பிரசண்ண குமார் ஐபிஎஸ் “மக்களைத் தேடி மாவட்ட காவல்” திட்டத்தை அவர் மேலத்தாழையூத்தில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தனி காவலர். 3 மாதங்களில் 100% சிசிடிவி கண்காணிப்பு இலக்கு. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க: 94981 01740 என்ற புதிய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
நெல்லை: 74 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் விசார பருவத்திற்கான நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 74 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான அனைத்து உபகரணங்களும் காலி சாக்குகளும் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலை விபரங்கள் கொள்முதல் நிலையங்களே வைக்கப்பட்டுள்ளன.


