News August 27, 2025
வேலூர்: அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 28, 2025
ஆம்பூருக்கு விரைந்த வேலூர் போலீசார்

ஆம்பூர் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு பெரும் கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக.28) வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக எஸ்.பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் வேலூரில் இருந்து 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசார் ஆம்பூருக்கு சென்றனர்.
News August 28, 2025
பாலகன் விநாயகர் டப்பில் குளிப்பது போன்று சிலை

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் விதவிதமாக சிலைகளை வைத்து இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் வேலூர் கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பாலகன் விநாயகர் டப்பில் குளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கு வந்த மக்கள் பாலகன் விநாயகர் சிலையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
News August 28, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

வேலூர் மாவட்டத்தில் இன்று(ஆக.28) அரியூரில் உள்ள காருண்யா மஹாலில் மட்டுமே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மண்டலம் – 4 பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முகாமுக்கு நேரில் சென்று உங்கள் கோரிக்கைகளை விண்ணப்பங்களை அளித்து தீர்வு பெறலாம். இங்கு பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்