News August 27, 2025
சட்டம் அறிவோம்: பஸ்ஸில் இந்த பிரச்னை வந்தால்..

பஸ்ஸில் AC டிக்கெட் புக் செய்துவிட்டு, AC வேலை செய்யவில்லை, சீட் சரியாக இல்லை, சுத்தமாக இல்லை என எந்த புகாராக இருந்தாலும் சட்டப்படி நிவாரணம் கிடைக்கும். முதலில் பிரச்னையை பஸ் டிரைவரிடம் கூறுங்கள். அவர் முரணாக பதிலளித்தால், பஸ் நிறுவனத்திடம் புகாரளியுங்கள். அவர்களும் முரண்டு பிடித்தால், வீடியோ ஆதாரத்துடன் வழக்கு தொடுக்கலாம். வழக்கின் செலவுடன் சேர்த்து நிவாரணம் அளிக்கப்படும். SHARE IT.
Similar News
News August 28, 2025
இந்த உயிரினத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க…

புகைப்படத்தில் நீங்கள் காண்பது தங்க மீன் அல்ல. இது சற்று வழக்கத்திற்கு மாறான சுறா மீன். கோஸ்ட் ரிகா நாட்டின் கடற்கரை பகுதியில் இந்த ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதெப்படி ஆரஞ்சு நிறத்தில் சுறா ? அதாவது உயிரினங்களின் தோலில் நிறமிகள் (மெலனின்) இழக்க தொடங்கினால் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறம் அதிகமாக வெளிப்படும் எனவும் இது அரிதினும் அரிது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
News August 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 28, 2025
கலப்பு திருமணம் பாஜக ஆபிஸில் நடைபெறுமா? சீமான்

காதல் திருமணங்களுக்கு தங்களது கட்சி அலுவலகங்களை பயன்படுத்தலாம் என சிபிஎம் மற்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், ஒரு இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் பாஜக அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? அதைப் போன்று உயர் சாதி பெண்ணுக்கும், பட்டியல் சமூக பையனுக்கும் சிபிஎம் சார்பில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? என கேட்டுள்ளார்.