News April 9, 2024
இருளா் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். அந்த வகையில் நீடாமங்கலம் தாலுகா, எடக்கீழையூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர்கள் சாதிச் சான்றிதழ் வழங்காததால் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News September 6, 2025
திருவாரூர்: கோழிப்பண்ணை அமைக்க மானியம்

திருவாரூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News September 6, 2025
திருவாரூர்: ITI, டிப்ளமோ போதும்.. சூப்பர் வாய்ப்பு

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ முடித்த விருப்பம் உள்ளவர்கள்<
News September 6, 2025
சட்டவிரோதமாக மது விற்ற 14 பேர் கைது

மீலாது நபியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மது விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சட்டவிரோதமாக நேற்றைய தினம் மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 675 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.