News August 27, 2025
நாமக்கல்: 10th போதும்.. மாதம் ரூ.6,000+பயிற்சி!

நாமக்கல் மக்களே 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்? தமிழ்நாட்டில் ரயில்வேயில் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 பயிற்சி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.6,000 (10th), ரூ.7,000 (12th, ITI) உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News August 28, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, ஒரு முட்டையின் விலை ரூ. 5.05 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று முட்டையின் விலை ரூ. 5.00 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 28, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில், 4 சக்கர வாகன ரோந்துப் பணிக்காக, தினமும் 6 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, இன்று (ஆகஸ்ட் 27) பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் எண்கள்: நாமக்கல்: ராஜமோகன் – 94422 56423, வேலூர்: ரவி – 94438 33538, ராசிபுரம்: சின்னப்பன் – 94981 69092, திருச்செங்கோடு: டேவிட் பாலு – 94865 40373, திம்மநாயக்கன்பட்டி: ரவி – 94981 68665, குமாரபாளையம்: செல்வராஜு – 99944 97140.
News August 27, 2025
நாமக்கல் காவல்துறை சார்பில் பாதுகாப்பு அறிவுரை!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் தொலைந்து போனால், உடனடியாக அருகிலுள்ள காவலர்களை அணுக வேண்டும். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், 100 எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடலாம்.