News August 27, 2025

தி.மலை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

தி.மலை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

Similar News

News August 28, 2025

மனநல மையங்கள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை.

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மனநல மருத்துவமனைகள் மற்றும் மறுவாழ்வு மையங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். மனநல பராமரிப்பு சட்டம் 2017-இன்படி, ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறினால், அனுமதியின்றி செயல்படும் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் (ஆக.27) எச்சரித்துள்ளார்.

News August 27, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக-27) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!