News August 27, 2025
விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதல் விநாயகர்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்தில் உள்ள விநாயகர் சிற்பம், தமிழ்நாட்டின் முதல் விநாயகர் சிற்பமாகத் திகழ்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இச்சிற்பத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. அறிஞர்களின் ஆய்வில், இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பல்லவர் காலத்திற்கு முந்தைய விநாயகர் வழிபாட்டிற்குச் சான்றாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 28, 2025
விழுப்புரத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிற்பத்தில் யானை மீது அமர்ந்து பவனி வருவது போன்ற முருகனின் அழகிய கற்சிற்பம் ஒன்று விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய சிற்பம் விழுப்புரம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்
News August 27, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று(ஆக.27) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
விழுப்புரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும். இது ஒரு பத்துநாள் திருவிழாவாகும், அதனை முன்னிட்டு விழுப்புரம் – வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.