News August 27, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று 4 மி.மீட்டரும், நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிக பட்சமாக 96.8 டிகிரியாகவும் இருக்கும்.

Similar News

News August 27, 2025

நாமக்கல் காவல்துறை சார்பில் பாதுகாப்பு அறிவுரை!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் தொலைந்து போனால், உடனடியாக அருகிலுள்ள காவலர்களை அணுக வேண்டும். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், 100 எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடலாம்.

News August 27, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (27.08.2025) இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்கள்: நாமக்கல்: யுவராஜன் – 94981 68363, ராசிபுரம்: சுகவனம் – 94981 74815, திருச்செங்கோடு: சிவகுமார் – 94981 77601, வேலூர்: சீனிவாசன் – 94981 76551 ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 27, 2025

நாமக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!