News August 27, 2025
மைனாரிட்டி ஆட்சி நடத்தும் NDA: ஸ்டாலின் தாக்கு

பிஹாரில் BJP-யின் துரோக அரசியல் தோற்கப் போவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ராகுல் காந்தி நடத்திவரும் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் மிரட்டலுக்கு ராகுல் பணிய மாட்டார் என்றார். 400 இடங்கள் என கனவு கண்ட NDA-வை, 240 இடங்களிலேயே INDIA கூட்டணி முடக்கியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், மெஜாரிட்டி என ஆட்டம் போட்டு வந்த அக்கூட்டணி தற்போது மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
Similar News
News August 28, 2025
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை? ஃபிஃபா எச்சரிக்கை

அக்டோபர் 30-ம் தேதிக்குள் புதிய விதிகளை அமல்படுத்தவில்லை என்றால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு(AIFF) தடை விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. கால்பந்து அமைப்புகள் தன்னிச்சையாக இயங்க வேண்டுமென ஃபிஃபா நினைக்க, இந்திய அரசு அதில் தலையிட நினைப்பதே பிரச்னைக்கு காரணம். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2036-ல் அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் நிலையில், AIFF-க்கு தடை விதிக்கப்பட்டால் அது பாதிப்பாக அமையும்.
News August 28, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 28, ஆவணி 12 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
News August 28, 2025
நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் டும் டும் டும்

தமிழில் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், ‘டிக் டிக் டிக்’, ‘சங்கத் தழிழன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடித்த அவர், ஃபார்முலா ஒன் கார் பந்தய பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை நிவேதா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மாடலிங் துறையில் உள்ள அவரது காதலரின் பெயர் ரஜித் இப்ராம்.