News August 27, 2025

வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை- ஆட்சியர்

image

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா வரும் ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வேளாங்கண்ணி கடற்கரையில் திருவிழா நாட்களில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

நாகை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

image

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 27, 2025

நாகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி!

image

நாகை மக்களே.. மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News August 27, 2025

நாகைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணியில் மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற ஆக.29ம் தேதி தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு பண்ருட்டியில் இருந்து நாகைக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஆக.29 மற்றும் செப்.7 ஆகிய தேதிகளில் காலை 9:32 மணிக்கு பண்ருட்டியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு நாகைக்கும், பின்னர் 1.20 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு மாலை 4:45க்கு பண்ருட்டி சென்று சேரும்.

error: Content is protected !!