News April 9, 2024
பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இதை செய்ய வேண்டும்!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வடக்கு, மேற்கு இந்தியாவில் அக்கட்சியை I.N.D.I.A கூட்டணி கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. எதிர்க்கட்சிகளிடம் பாஜகவை வீழ்த்த போதிய திட்டம் எதுவும் இல்லை” என்றார்.
Similar News
News February 5, 2026
திமுகவிடம் புதிய டிமாண்ட் வைக்கும் விசிக

2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட VCK, இம்முறை திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற முயற்சிக்கிறது. திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மட்டுமே களம் கண்ட VCK, தற்போது தெற்கு & மேற்கு மாவட்டங்களையும் குறிவைத்துள்ளது. தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியலை VCK தயாரிப்பதாகவும், தொகுதிப் பங்கீட்டின் போது திமுகவிடம் டிமாண்ட் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
News February 5, 2026
UGC NET தேர்வு முடிவுகள் வெளியீடு

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான யுஜிசி நெட் 2025 தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதிய நிலையில், தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. https://ugcnet.nta.nic.in/ தளத்தில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பாடவாரியாக கட் -ஆஃப் மதிப்பெண்கள், இறுதி விடைக்குறிப்பு ஆகியவையும் வெளியாகி உள்ளன.
News February 5, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $28 (இந்திய மதிப்பில் ₹2,532) உயர்ந்து $5,018-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


