News August 27, 2025
மருத்துவமனையில் அமைச்சர்… வெளியானது புதிய தகவல்

அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நிலை குறித்து மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி உள்ளிட்ட சிறு உடல் உபாதைகளுக்காக 2 நாள்களுக்கு முன்பு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு எத்தனை டாக்டர்கள் உள்ளனர்?

2024, அக்டோபர் வரையிலான ஆதார் பதிவுகளின் அடிப்படையில் தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி, இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு சராசரியாக 99 பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் உள்ளனர். அதிகபட்சமாக கோவாவில் 298, கர்நாடகா 207, கேரளா 203, ஆந்திரா 198 என்ற எண்ணிக்கையில் டாக்டர்கள் உள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News August 28, 2025
விஜய்யை கண்டுகொள்ளாத VIP.. கூட்டணிக்கு GATE-ஆ?

கூட்டணிக்காக, விஜய் தனது பார்வையை காங்., பக்கம் திருப்பியிருப்பதாக பேசப்பட்டது. இதற்கு தோதாக, தவெகவுடன் கூட்டணி வைத்தால் 70 சீட்கள் வரை கிடைக்கும் என காங்., VIP-கள் சிலர் கணக்கு போட, இதனை பிடித்துக்கொண்ட பனையூர் வட்டாரம் விஜய்யை ராகுலுடன் சந்திக்க வைக்க அப்பாயின்மென்ட் கேட்டு வருகின்றனராம். ஆனால் ஸ்டாலினுடன் ராகுலின் உறவு பலமாக இருப்பதால் விஜயை அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
News August 28, 2025
குழந்தைகள் கூட மோடியை பற்றி சொல்கின்றனர்: ராகுல்

BJP, RSS இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு எப்படி வெற்றி பெற்றன என்பதை விரைவில் நிரூபிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டை கண்டித்து பிஹாரில் இன்று நடைபெற்ற யாத்திரையில் பேசிய அவர், PM மோடி வாக்குகளை திருடுகிறார் என சிறு குழந்தைகள் தன் காதில் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லோக் சபா, ஹரியானா தேர்தல்களில் நடைபெற்ற வாக்கு திருட்டின் ஆதாரத்தை கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.