News August 27, 2025
விழுப்புரம்: வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை ஆகஸ்ட் 28 காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்பு நடக்க இருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
விழுப்புரத்தில் பயங்கர விபத்து!

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை ரோந்துப் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சிவராஜ்(38). சம்பவத்தன்று இவர், தனது மனைவி சியாமளாதேவி(35), மகன் சாய் சரவணன்(3) ஆகியோருடன் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி தனது பைக்கில் புறப்பட்டார். வளவனூர் அருகே, கோவையைச் சேர்ந்த அபிஷேக்(33) ஓட்டி வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த சிவராஜ், சியாமளா தேவி, சரவணன் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News March 10, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
விழுப்புரம் ஆட்சியர் இளைஞர்களுக்கு அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவிப்பின்படி, தாட்கோ (TAHDCO) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு மற்றும் கேபின் குழு பணிகளுக்கான 3 மாத இலவச பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுடைய, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத தகுதியுள்ள நபர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


