News August 27, 2025

வேலூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 27) வெளியிடப்பட்டது. இதில் “Security starts with you” & “Think before you click” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களுக்காக இடம்பெற்றிருந்தது. மேலும், சைபர் குற்றங்கள் ஏற்பட்டால் 1930 இலக்கத்திலும் cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News August 28, 2025

பாலகன் விநாயகர் டப்பில் குளிப்பது போன்று சிலை

image

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வித்தியாசமான முறையில் விதவிதமாக சிலைகளை வைத்து இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் வேலூர் கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பாலகன் விநாயகர் டப்பில் குளிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்கு வந்த மக்கள் பாலகன் விநாயகர் சிலையுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

News August 28, 2025

வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று(ஆக.28) அரியூரில் உள்ள காருண்யா மஹாலில் மட்டுமே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மண்டலம் – 4 பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முகாமுக்கு நேரில் சென்று உங்கள் கோரிக்கைகளை விண்ணப்பங்களை அளித்து தீர்வு பெறலாம். இங்கு பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்

News August 28, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆகஸ்ட் .27) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!