News April 9, 2024
மொட்டை மாடியில் அலுவலகம் கட்டிய நயன்தாரா

‘ஸ்கின்’ என்ற அழகு சாதன நிறுவனத்தை தொடங்கிய நடிகை நயன்தாரா, தற்போது அதற்காக புது அலுவலகம் ஒன்றை கட்டியுள்ளார். தனது வீட்டு மொட்டை மாடியில், முற்றிலும் கண்ணாடிகளாலான பிரம்மாண்ட அலுவலகத்தை திறந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. அதுவும் வெறும் 30 நாள்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 9, 2026
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமா? அமைச்சர் விளக்கம்

கச்சா எண்ணெய் இருப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புடன் இருப்பதாக ராஜ்யசபாவில் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேற்காசிய போர் குறித்து பேசிய அவர், போரை PM மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், டெஹ்ரானில் உள்ள தூதரகம் இந்தியர்களை பாதுகாக்க முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் மேற்காசிய நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் கூறினார்.
News March 9, 2026
BREAKING: தவெகவில் இருந்து விலகுகிறாரா?

விஜய்யுடன் த்ரிஷா சென்றது ஒரு குடும்பத்தை கெடுக்கும் செயல் என்று நடிகையும், தவெக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியார் கூறியுள்ளார். மக்களின் மனநிலை குறித்தும், தவெக நிர்வாகிகளின் மனப்பக்குவம் குறித்தும் விஜய்க்கு ஒன்றும் தெரியாது எனவும் கடுமையாக விமர்சித்தார். மேலும், என் மேல் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தால் கவலைப்பட மாட்டேன்; கட்சியில் இருந்து விலகி எனது சொந்த பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
கண்ணீரை மறைத்து விளையாடிய இஷான்

தனிப்பட்ட துயரத்தை மீறி நாட்டுக்காக விளையாடிய இஷானின் மனவலிமை மற்றும் அர்ப்பணிப்பு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. பைனலுக்கு முந்தைய நாள் நடந்த கார் விபத்தில், இஷானின் சகோதரி(cousin) & அவரது கணவர் உயிரிழந்தனர். இந்த பெரும் துயரத்திலும், தனது கண்ணீரை மறைத்து அணிக்காக களமிறங்கிய இஷான், சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்தார். மேலும், இந்த வெற்றியை தனது மறைந்த சகோதரிக்கு அர்ப்பணித்தார்.


