News August 27, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
Similar News
News August 28, 2025
ஹீரோவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Films மற்றும் ‘குட் நைட்’, ‘லவ்வர்’, டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களை தயாரித்த MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் மிகவும் எமோஷனலான கேரக்டரில் அபிஷன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 28, 2025
ராசி பலன்கள் (28.08.2025)

➤ மேஷம் – பாராட்டு ➤ ரிஷபம் – நன்மை ➤ மிதுனம் – அமைதி ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – பயம் ➤ கன்னி – கவலை ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தாமதம் ➤ தனுசு – ஜெயம் ➤ மகரம் – ஆதரவு ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – ஆக்கம்.
News August 28, 2025
ஐபோன் 17 சீரீஸ்: அப்டேட் வெளியானது

கலிஃபோர்னியாவில் வரும் செப்., 9-ம் தேதி ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஐபோன் 17, ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என 4 மாடல்கள் அறிமுகமாக உள்ளன. இந்தியாவில் செப்., 19 முதல் விற்பனை துவங்க உள்ளன. அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக இப்போன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ₹89,000 முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.