News April 9, 2024

BREAKING: திமுகவினர் வீடுகளில் திடீர் சோதனை

image

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் நடத்தப்படும் இச்சோதனை திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 7, 2025

PLEASE இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

image

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்: சோர்வு -திடீரென அதிக களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வது *காரணமின்றி தலைச்சுற்றல் & மயக்கம் *தூங்குவதில் சிரமம் -படுக்கையில் நேராகப் படுத்திருக்கும்போது தூங்குவதற்கு கடினமாக உணர்வது *கால் வீக்கம் *உடல் எடை வேகமாக அதிகரித்தல் *தொடர் சளி & இருமல். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

News July 7, 2025

குஜராத்தில் பிரம்மாண்ட விண்வெளி மையம்

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ₹10,000 கோடி செலவில் குஜராத்தில் பெரிய விண்வெளி மையத்தை அமைக்கவுள்ளது. குஜராத் மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், ராக்கெட் ஏவுதலின் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் இங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-5, ககன்யான், சுக்கிரன் திட்டம் போன்றவற்றுக்கு இந்த மையம் முக்கியமானதாக இருக்கும்.

News July 7, 2025

பாஜகவினரை வைத்துக் கொண்டே EPS செய்த சம்பவம்!

image

2026-ல் அதிமுக ஆட்சி அமையும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். பாஜகவினர் கூட்டணி ஆட்சி என பேசி வரும் நிலையில், இபிஎஸ் பாஜகவினரை வைத்துக் கொண்டே அதிமுக ஆட்சி என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனும் கூட்டணி ஆட்சியே அமையும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டணி ஆட்சி அமையுமா?

error: Content is protected !!