News August 27, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
Similar News
News March 18, 2026
ராமநாதபுரம்: ரூ.4.90 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருப்புல்லாணி சோதனைச்சாவடியில் நேற்று நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கீழக்கரை முகம்மது சகில் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4.90 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
News March 17, 2026
இராமநாதபுரம்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கடம்பாகுடியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தோட்டாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு தனது மனைவியுடன் காரில் தொண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பாலு அவரது மனைவி இருவரும் நல்வாய்ப்பாக காயமுமின்றி தப்பினர்.
News March 17, 2026
இராமநாதபுரம்: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


