News August 27, 2025

BREAKING: தங்கம் விலையில் பெரிய மாற்றம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹75,120-க்கும், கிராமுக்கு ₹35 உயர்ந்து ₹9,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் ₹1,680 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News August 27, 2025

நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன்

image

ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து, நடிகர் சிவகார்த்திகேயன் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி வீட்டில் தவறி விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தற்போது ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சு கூறியிருந்தார்.

News August 27, 2025

பிஹாரில் பாஜகவின் அகம்பாவம் புதைக்கப்படும்: CM

image

இந்திய ஜனநாயக போரின் மையப்பகுதியாக பிஹார் உருவெடுத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்காளர்களை நீக்கியோ, நிறுவனங்களை கையகப்படுத்தியோ மக்களின் வலிமையை பாஜகவால் நசுக்க முடியாது எனவும், INDIA கூட்டணி பிறந்த பிஹார் மண்ணில் பாஜகவின் அகம்பாவம் புதைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், இந்திய ஜனநாயகத்தின் அடுத்த அத்தியாயத்தை ஒளிரச் செய்யும் ஃப்ஜ்ஃப்க்ஃப்ஃப்

News August 27, 2025

சட்டம் அறிவோம்: பஸ்ஸில் இந்த பிரச்னை வந்தால்..

image

பஸ்ஸில் AC டிக்கெட் புக் செய்துவிட்டு, AC வேலை செய்யவில்லை, சீட் சரியாக இல்லை, சுத்தமாக இல்லை என எந்த புகாராக இருந்தாலும் சட்டப்படி நிவாரணம் கிடைக்கும். முதலில் பிரச்னையை பஸ் டிரைவரிடம் கூறுங்கள். அவர் முரணாக பதிலளித்தால், பஸ் நிறுவனத்திடம் புகாரளியுங்கள். அவர்களும் முரண்டு பிடித்தால், வீடியோ ஆதாரத்துடன் வழக்கு தொடுக்கலாம். வழக்கின் செலவுடன் சேர்த்து நிவாரணம் அளிக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!