News April 9, 2024
நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி?

வெயில் காலத்தில் ஏற்படும் சின்னம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது நுங்கு. கோடையில் அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். இளநீர் வழுக்கைத் துண்டுகள், நுங்கு, பனை வெல்லம் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் தேங்காய் பாலை ஊற்றி, சில நுங்கு துண்டுகளை சேர்த்தால் சுவையான நுங்கு பால் சர்பத் ரெடி.
Similar News
News July 7, 2025
பதவி நீக்கம்.. சில மணி நேரத்தில் அமைச்சர் தற்கொலை

ரஷ்யாவில் அதிபர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனின் தாக்குதல் காரணமாக ரஷ்யாவில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் அந்த துறையின் அமைச்சர் ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் பதவி நீக்கம் செய்தார். இதனையடுத்து, காருக்குள் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சுட்டு ரோமன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News July 7, 2025
மீண்டும் போர் மூளுமா?

இஸ்ரேல் – ஈரான் போர் சற்றே ஓய்ந்துள்ள நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஏமனின் ஹூதி கிளர்ச்சிப் படை. இதையடுத்து ஏமனின் துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதிலடியாக, மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹூதி நடத்தியுள்ளது. காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மீண்டும் மோதல்கள் நடப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
News July 7, 2025
பெண்களும் கற்றாழையும்

*கர்ப்ப காலம், பிரசவ காலத்துக்கு பிறகு பெண்களின் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சருமச் சுருக்கங்களை நீக்கக் கற்றாழை ஜெல்லை தடவலாம். *நீர்க்கடுப்பு, நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், உடல்சூடு போன்றவற்றையும் சோற்றுக்கற்றாழை குணப்படுத்தும். *கற்றாழை மடலை கீறி, அதில் வடியும் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். அதை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.